வன்னேரிக்குளம் தடவி வயல்வழிவந்தாயோ.....
என் ஆசைக்குமரியின் அழகைப்பார்த்தாயா........
என் அருமைக்காதலியே எழில்கொஞ்சும் நாயகியே....
நீ தெருவோரம் கிடந்தாலும் விழியாடை செய்வாயடி....
எங்கே எங்கேயென என் வரவு பார்ப்பாயடி.
ஆயிரம் வலிசுமந்து உன் வழி வந்திருப்பேன்
உன் முகம் பார்த்ததும் எல்லாம் மறந்திருப்பேன்
எங்கே எங்கேயென என் வரவு பார்ப்பாயடி.
ஆயிரம் வலிசுமந்து உன் வழி வந்திருப்பேன்
உன் முகம் பார்த்ததும் எல்லாம் மறந்திருப்பேன்
பச்சைப்பட்டுடுத்தி பரந்திருக்கும் உன் அழகை
பக்குவமாய் பருகிய பின் பாதியிலே பிரிந்திருப்பேன்
நீருக்குள் நிழலாடும் பச்சைவனக்கிளைகளே
கிளைகளில் கூடுகின்ற வெண்நாரை பட்சிகளே
பக்குவமாய் பருகிய பின் பாதியிலே பிரிந்திருப்பேன்
நீருக்குள் நிழலாடும் பச்சைவனக்கிளைகளே
கிளைகளில் கூடுகின்ற வெண்நாரை பட்சிகளே
இரைகேட்டு இரைகேட்டு வாய்திறக்கும் குஞ்சுகளே
ஆரவாரம் ஏதுமில்லா அமைதிப்பிள்ளையாரே
வழியோரம் வளைந்தோடும் வாய்காலே
பயிரகிக்கதிராகி காத்து நிற்கும் வயல்வெளியே
ஆரவாரம் ஏதுமில்லா அமைதிப்பிள்ளையாரே
வழியோரம் வளைந்தோடும் வாய்காலே
பயிரகிக்கதிராகி காத்து நிற்கும் வயல்வெளியே
என்னருமைக் காதலியே வன்னியின் வடிவழகே
இத்தனை அழகையும் எங்கிருந்து பெற்றாயடி
வயதுக்கு வந்தவளே இயற்கையின் இளையவளே
உன்னைப்போல் உன்னைப்போல் எத்தனை அழகிகளை
இத்தனை அழகையும் எங்கிருந்து பெற்றாயடி
வயதுக்கு வந்தவளே இயற்கையின் இளையவளே
உன்னைப்போல் உன்னைப்போல் எத்தனை அழகிகளை
என் மண்ணில் நானிழந்தேன் ஏதிலியாய் ஏங்கிநின்றேன்
கழைத்து உழைத்ததெல்லாம் கண்முன்னே போனதெடி
உற்றம் சுற்றம் உறவெல்லாம் தொலைந்ததடி
உலக மனங்களில் மனிதம் அது இல்லையடி
கழைத்து உழைத்ததெல்லாம் கண்முன்னே போனதெடி
உற்றம் சுற்றம் உறவெல்லாம் தொலைந்ததடி
உலக மனங்களில் மனிதம் அது இல்லையடி
உன் மடியில் நானிருந்த நாட்களினி வாராதோ
வயதாகிப்போனாலும் வாலிபம்தான் தேய்ந்தாலும்
தேயாத பிறையாகி தெருவோரம் காத்துநிற்பாய்
நீ கோடை காலத்தின் குளிர்விக்கும் அருவி
வயதாகிப்போனாலும் வாலிபம்தான் தேய்ந்தாலும்
தேயாத பிறையாகி தெருவோரம் காத்துநிற்பாய்
நீ கோடை காலத்தின் குளிர்விக்கும் அருவி
மாரி காலத்தின் குளிர் வீசும் மல்லிகை
பங்குனி நாளொன்றில் உன் மடியில் படுத்திருந்தேன்
வலுவிழந்த மூதாட்டி வறுமையால் மீன்பிடித்தாள்
பொழுதாகிப்போனபின்னும் பறிதனில் மீனில்லை
பங்குனி நாளொன்றில் உன் மடியில் படுத்திருந்தேன்
வலுவிழந்த மூதாட்டி வறுமையால் மீன்பிடித்தாள்
பொழுதாகிப்போனபின்னும் பறிதனில் மீனில்லை
முகவாட்டம் ஏதுமின்றி முயற்சித்தே கொண்டிருந்தாள்
ஆனாலும் மீனில்லை இரவுக்கோ உணவில்லை
சட்டென தூண்டலிலே சிக்கியது மீன் ஒன்று
மெல்லெனப் பிடித்ததனை புல்லினில் போட்டாள் பார்
ஆனாலும் மீனில்லை இரவுக்கோ உணவில்லை
சட்டென தூண்டலிலே சிக்கியது மீன் ஒன்று
மெல்லெனப் பிடித்ததனை புல்லினில் போட்டாள் பார்
துடித்தது மீன் அம்மா துவண்டது பாரம்மா
வெற்றியால் புன்னகைத்தாள் பழங்கிழவி
ஒருவரின் துடி துடிப்பு மற்றவர்க்கு சிரிப்பென்றாய்
ஓர் நொடியில் ஓர்பாடம் உன்மடியில் நான் கற்றேன்
வெற்றியால் புன்னகைத்தாள் பழங்கிழவி
ஒருவரின் துடி துடிப்பு மற்றவர்க்கு சிரிப்பென்றாய்
ஓர் நொடியில் ஓர்பாடம் உன்மடியில் நான் கற்றேன்
பூரண மனிதனாய் எனைப் புடம் போட்ட கன்மணியே
நிச்சயமாய் ஓர்நாள் உனத்தேடி நான் வருவேன்
எனக்காக காத்திரடி உறவாடப் பார்த்திரடி
நிச்சயமாய் ஓர்நாள் உனத்தேடி நான் வருவேன்
எனக்காக காத்திரடி உறவாடப் பார்த்திரடி

2 comments:
//என் மண்ணில் நானிழந்தேன் ஏதிலியாய் ஏங்கிநின்றேன்
கழைத்து உழைத்ததெல்லாம் கண்முன்னே போனதெடி
உற்றம் சுற்றம் உறவெல்லாம் தொலைந்ததடி
உலக மனங்களில் மனிதம் அது இல்லையடி//
காதல்கவிதைக்குள்ளும் ஒரு அரசியல் அணுகுண்டை அசால்டா வைச்சிருக்கீங்க..எப்படி இதேல்லாம்?..
இதைத்தான் உள்குத்து என்று சொல்லுவாங்களோ?..
Post a Comment