Monday, February 8, 2010

கடவுளுக்கோர் கடிதம்



ஓ யேசுவே கடவுளின் திருமகனே
உங்களின் சிலுவையை நாங்களே சுமக்கிறோம்
எங்களின் சுமைகளை நீங்களே அறிவீர்கள்
உங்களின் வாழ்வும் போராட்டம் தானே
உண்மையில் நீங்கள்உயிர் வாழும் கடவுள்
உனக்காக அல்லபிறக்காக வாழும் தியாகத்தின் உச்சம் இதுவே என்றீர் உங்களைப் போல பிறக்காக வாழ நாங்களும் ஆசைப்பட்டோம்
அயலானுக்காக உயிரக்கொடுத்து இனத்தைக் காத்து நின்றோம்
நீதி நியாயம் தர்மமெல்லாம் எங்களின் பக்கம் நிறையவே உண்டு

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்தேடுங்கள் கிடைக்குமென்றீர்
நாம் கேட்காத இடமில்லை தேடாத மனங்களில்லை
ஆனாலும் உலகின் மனச்சாட்சி துயில் எழவில்லைவேறொன்ருமில்லை -
இது சோதனைக்காலம் கடவுளை சோதிக்க மனிதனால் கூடுமோ
மனிதனைச் சோதித்தல் கடவுளின் செயல் அன்றோ

உலக வாழ்வில் இது ஒன்றும் புதிதல்ல நான் வலியால் துடத்திடிம் மனிதப்புழு ஏதோ மயக்கத்தில்வாய்மொழி சொல்கிறேன் ஈராயிரம் ஆண்டுக்கு முன் நீங்கள் மொழிந்தவை நம்பிக்கை தளர்தல் எம் பிழையன்றோ என் இனத்தின் பக்கமும் சில பிழைகள் உண்டு நீங்களும் அதை நன்றாக அறிவீர்கள்
அன்புச் சீடனும் யூதாசின் ஓர் முத்தம்அன்று உங்களுக்கு சிலுவையைத்தரவில்லையா?

எங்கள் இனத்திலும் ஏராளம் யூதாசுக்கள் எங்கள் தோள்களிலும் பாரச் சிலுவைகள் சோதனை வருகையில் விழித்திரு என்றீர் மாறி மாறி அறைந்தவர்க்கெல்லாம் உம் வழி நின்று கன்னத்தைக்காட்டினோம் அவர் எப்போதும் மாறாதிருந்தார் இதன் பின்னே வாழ வழி இல்லையென்றுவன்முறையை வன்முறையால்தான்அடக்கிட முடியுமென முடிவு செய்தோம் துரோகத்துச் செயலால் நலிவுறுகின்றோம்

மறுபடியும்நாம் வேண்டாத வியாபாரம் நாம் விரும்பாத சிறைகள்
இப்படி இப்படி எத்தனையோ வலிகள்.........ஆண்டவரே என்ன செய்வதாய் உத்தேசம் பாவியை மீட்க வந்த பரம பிதாவேபாவிகள் நாமும் காத்துக்கிடக்கின்றோம் பூமிப்பந்தின் நீதிவான்கள் உங்களத்தொழும் பிள்ளைகள் அன்றோஅதனால் தான் உங்களைக்கேட்கின்றேன்
நீதிவான்களை விழிக்க வையுங்கள்உறங்கிய உள்ளத்தை எழுப்பி விடுங்கள் மனச்சாட்சியின் கதவைத்திறந்துவிடுங்கள்ஆண்டவரே திறந்துவிடுங்கள்...............

புங்கையூர் குணா

1 comment:

Keddavan said...

கடவுளிடம் மட்டுமே நியாயாத்தை எதிர்பார்க்கும் நிலமைக்கு வந்துவிட்டோம்..சமூகவலியினை அழகாகச்சொல்லியிருக்கின்றீர்கள்...

Post a Comment

yasmin lawsuit