
வற்றாத நீர் இருக்கும்
வயலோரம் நெல் இருக்கும்
கடலோரம் கயலிருக்கும்
முற்றத்தில் கனியிருக்கும்
முப்பதாண்டுப் போரினிலே
இருபதாண்டுத்தடை போட்டும்
பட்டினியால் ஒரு மனிதன்
மாண்ட கதை சொல்வாயோ?
அத்தனைக்கும் நேர் நின்றார்
ஏர் பிடித்தும் போர் செய்தார்
வெட்ட வெட்ட கடலோடி
திரவியங்கள் தேடிவந்தும்
பஞ்சத்தின் தடை உடைத்தார்
போரினிலே நிமிர்ந்து நின்று
பூமிக்கோர் புதிரானார்
நேரினிலே தோற்ற பகை
நரித்திட்டம் வகுத்திட்டான்
ஒரு கூட்டை எரிப்பதற்கு
உலகத்தின் படை அழைத்தான்
தலையணை மந்திரத்தால்
தரணியார் கணை குவித்தார்
நெறி கெட்ட ஒரு சிலரை
தன் பக்கம் வளைத்திட்டான்
உலகமே பார்த்து நிற்க
புல்லில்லா சுடு மணலில்
பட்டிணியால் போர் தொடுத்தார்
ஒரு வேளை கஞ்சிக்காய்
பலவேளை காத்து நின்று
எறிகணையால் பலர் மாண்டார்
கைகளை பின்கட்டி
கைமேலே கல் கட்டி
நீச்சல் போட்டி வைத்து
நீருக்குள் தள்ளி விட்டு
நிறுவனங்கள் ஓடிவிட்டார்
நீதி கெட்ட உலகத்தின்
நெறி கெட்ட வெற்றியது
ஓடுபாதை முத்தத்தை
தனியொருவர் ஏன் கொடுத்தார்
உதவிய உலகத்தார்
ஒன்றாகி வந்திடுங்கோ
விசில் ஊதப்போகிறேன்
விழுந்து கும்பிடுங்கோ
விழுமியங்கள் செத்தாச்சு..


16 comments:
நல்லாயிருக்குங்க.
ஏற்கனவே வானம்பாடிகள் னு ஒரு பதிவர் இருக்காரே.
வாய் விட்டு கதறி அழணும்னு தோணுது,வலி நிறைந்த வரிகள்.
வானம்பாடி பாலாண்ணா பதிவர் வட்டத்துல பிரபலம்.இப்ப நீங்களும் அதே பெயரிலா?
அழகான ஆழமான வரிகள்...
super kavithai..
அழகான எழுத்துநடை உங்களிடமிருக்கின்றது..கவிதைகளுடன் அடிக்கடி சிறுகதைகளையும் எழுதுங்கள்..
சரி இனி இப்படி கவிதைகள் நிறையட்ட எதிர் பாக்கிரம்
இந்த சம்பவம் மனதை பிழிகிறது.பழைய நினைவுகளை மீட்டுகிறது.
மிக மிக உச்சம் இக்கதை.தொடர்ந்தும் நடந்தேறிய உண்மைகளை வெளிப்படுத்த
எமது ஊக்கமும் வாழ்த்துகளும் .
செம்பகம்
அகநாழிகை அவர்களே உங்களுக்கு நன்றிகள்.ஏற்கனவே இப்பெயரில் பதிவு இருந்தது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.சுட்டிக் காட்டியதற்கு அமைவாக "வான்முகில்" என எனது பதிவை மாற்றியுள்ளேன்.
ராஜ நடராஜன் அவர்களே உங்களுக்கு
நன்றிகள்.ஏற்கனவே இப்பெயரில் பதிவு இருந்தது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.சுட்டிக் காட்டியதற்கு அமைவாக "வான்முகில்" என எனது பதிவை மாற்றியுள்ளேன்.
ஜெரி ஈசானந்தா அவர்களே, உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியதற்க்கு, நன்றி
பெயர் தெரியாத நண்பரே உங்களுக்கு நன்றி
நண்பர் சங்கவி அவர்களுக்கு எனது நன்றி
நண்பர் ரஜீவன் அவர்களுக்கு எனது நன்றி, தொடர்ந்து முயற்ச்சிக்கிறேன்.
. V. A .S சங்கர் அவர்களுக்கு எனது நன்றி, நிச்சயமாக எளுதுவேன் தொடர்ந்து பாருங்கள்.
என்னை ஊக்குவித்த செம்பகத்திற்கு எனது நன்றி, நிச்சயமாக எளுதுவேன் தொடர்ந்து பாருங்கள், எளுதுங்கள்.
Post a Comment