அந்த நாட்கள் என் நெஞ்சைவிட்டுப் போகவில்லை நான் மரணிக்கும் வரை என்னுடன் நீங்காமல் நிழலாடப்போகிறதா? எனக்கே தெரியவில்லை. ஆம் அவை வன்னியின் இறுதி நாட்கள்.
2009,சித்திரை மாதம் ஒர் அடி நிலம் கூட இடைவெளி இன்றி வெட்ட வெளிகளிலும்,மரங்களின் கீழும் படங்குகளிலும் எம் உறவுகள் பசி பட்டிணி,நோய்பிணி,மரண ஒலங்களுடன் களித்த கரிநாட்கள்.
என் நாட்குறிப்பின் ஒருபக்கத்தை மட்டும் இன்று திறக்கின்றேன்,உங்களுக்காக இது கற்பனை அல்ல என் உயிரில் கலந்த உண்மைகள்.இவை தொடரும்....
அது கடலலை தாலட்டும் மாத்தளன் கடலோரம், லட்சக்கணக்கான மக்களுடன் அன்ரன் அண்ணனின் குடும்பமும் சிறிய படங்குக்குள் முடங்கிக்கிடந்தது.மூத்த பெண்பிள்ளைகள் தவிர ஆசையான கடைசி ஒரே மகன் வயது பத்திருக்கும்.குடும்பமே அவன் மேல் உயிரையே வைத்திருந்தது.சாதாரண நாட்க்களில் கூட பள்ளிக்கூடம் விட்டதும் மகனை சயிக்கிளில் ஏற்றியே திரிவார், அவ்வளவு கவனம்.
இப் பெண்பிள்ளைகளை எல்லாம் கரைசேற்க்கும் தோணியும் இவனே.
அவன் சிறுவன்தான், அவன் மனமோ அகன்றவானம், தன் தந்தை குடும்பத்தைக் காப்பாற்றப்படும்பாட்டை உணர்ந்து தனக்குள்ளேயே ஒரு கற்பனையை வளர்த்ததுடன் சகோதரிகளைசுற்றி இருத்தி, எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வான்.
வெறும் மணல் தரை, எல்லோரைப் போலவே இவர்களும் பூனை மண்ணைக்கிளறுவதைப்போல் மண்ணைக் கிளறி, அதன் மேல் படங்கைக் கட்டி, அதனுள் படுத்துக் கிடந்து உயிர்காக்கத் துடித்தனர்.ஆனால் அதனுள் குண்டு வீழ்ந்து துடிதுடித்து மடிந்தவர் கதைகளே அதிகம்.இப்படித்தான் இவர்களின் குடும்பமும் நாட்களைக் களித்தது.என்னதான் நடந்தாலும் குடிநீருக்கும் குளிப்பதற்கும் மலசலத்துக்கும் இதர அவசிய தேவைகட்கும், வெளியில் வந்துவிட்டு ஒடவேண்டும். இச்சந்தர்ப்பத்தில்தான் ஆயிரம் எண்ண்ம் சுமந்த அந்தச்சிறுபிஞ்சு, வெளிவந்து மீண்டும் வளைக்குள் போகுமுன்னர்,தூரத்து வேட்டொலிகள் அவனருகாக சீறிப்பாய்து போனது.

குப்புறவீழ்ந்து நிலையெடுத்தும்,இரக்கமற்ற அந்த ரவை அவன் மார்பில் பாய்ந்தது. துடிதுடித்து அலறிய தன்மகனை, இரத்தம் தோய்ந்த தன்னுயிரை, தாவியணைத்தவாறு மாத்தளன் மருத்துவமனைக்குக் கொண்டோடுகின்றார் தந்தை. எங்கிருந்தோ வந்தநானும் இதில் இணைந்து கொண்டேன், நானும் ஒடினேன், அந்தப்பிஞ்சு உதடுகள் ஏதோ முனகியது,இதை எழுதுவதற்கு என் கை நடுங்குவதை உணர்கிறேன். ஆம், இயேசுவின் சிலுவைச்சாவை ஒப்பிட்டுப் பார்க்கிறேன்,அவரும் பாடுபடுவதற்கு முன் தன் தந்தையிடம் மன்றாடிக்கேட்டர்.முடியுமனால் இத்துன்பக்கலத்திலிருந்து தன்னை விடுவிக்குமாறு. ஆனாலும் முடியவில்லை.மூன்றுநாட்கள் சிலுவை சுமந்தார்,மரித்தார், உயிர்த்தார்.அவரின் ஒவ்வொரு வார்த்தைகளும் உலகத்தை ஆட்கொண்டு,வியாபித்துள்ளது.கோடான கோடி மக்கள் தொழுகின்ற உயிர்வாழும் கடவுளவர்.இயேசுவைத் தொழும் இந்தச்சிறுவனும், ஒரு சிறிய இயேசுவாக மன்னாரிலிருந்து, மாத்தளன்வரை சிலுவையைச் சுமந்தான் அந்த மகன் தன் தந்தையிடம், இரத்த வெள்ளத்தில் தோய்ந்து கேட்க்கிறான்
"அப்பா நான் சாவேனா?.. அப்பா நான் சாவேனா?.. என்னை சாகவிடாதேங்கோ.. சாகவிடாதேங்கோ..அம்மா எங்க?அக்கா எங்க?"
ஆறாய்ப்பெருகும் கண்ணீருடன்
"இல்லை மகனே, இல்லை மகனே நீ சாகமாட்டாய், சாகவிடமாட்டேன்,என் பிள்ளைக்கு ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை"
அந்தப் புளியமரத்தடியில்,தரப்பாலில் கிடத்தினோம். எங்கும் மனித ஓலங்கள்,மரணத்துடன் போராடுபவர்கள் ஒருபுறம்,மரணித்துப்போனவர்கள் மறுபுறம், உடனும் தியேட்டருக்குள் கொண்டுசென்றார்கள் சற்று நிம்மதி, ஆனாலும் மனம் நடுங்கியது. கதறியழும் குடும்பத்தை கதறும் மனிதர்களே தேற்றுகிறார்கள்.மயக்கமருந்தில்லை,விறைக்கஊசியில்லை,
பிராணவாயுவில்லை.ஓய்வின்றி உறக்கமின்றி ஊனின்றி படாத பாடுபடும் வைத்தியர்கள் ஊளியர்கள் தொண்டர்கள். இப்போது அவன் குரலில் ஓசையில்லை கன்னங்களில் கண்ணீர் மட்டும். மருந்தில்லாத மருத்துவமனையில்,நிபுணர் இருந்தென்ன ம்ருத்துவர் இருந்தென்ன. முக்கால்வாசிப்பேர் மருந்தின்றி இறந்தகதை , யாபேரும் அறிந்ததே.அந்த வரிசையில் அவனும் இணைந்தான். என்மனமோ ஏற்க்க மறுக்கிறது,
ஆம் அந்த வண்டில் வாசலால் வெளிவந்து அதே தேமா மரத்தடியில் வரிசையில் கிடக்கும் உடல்களுடன் அடுக்கப்படுகிறது.
அவன் இறந்துவிட்டான் என் மனம் உணர்ந்தது ஆயிரம் ஈட்டிகள் என்மார்பில் ஒன்றாகப் பாய்ந்த வேதனை.
இந்தப் பிஞ்சு இயேசு மீண்டும் உயிர்ப்பானா???
தன் அப்பா அம்மா அக்கா உறவுகளுக்கு காட்ச்சி கொடுப்பானா?
இல்லைக் காப்பானா?
இவனின் கதையும் காவியமாகுமா?
என் மனதோரம் ஏராளம் கேள்விகள். சடங்குகள் ஏதுமின்றி சூடாறுமுன்மணலில் புதைக்கவேண்டும். தயாராகும் தமிழர் புனர்வாழ்வுக்கழகம்.
இவன் செய்த பாவம்தான் என்ன??
மனித நேயம் பேசும்,அவர்தம் உரிமை பேசும் ஆயிரம் நிறுவனங்களால் பயனென்ன?
ஆனாலும் அந்த சிறிய உதடுகளின் கடைசி வார்த்தைகள் மட்டும் இன்னும் என் காதில் நித்தமும் ஒலிக்கிறது.
"அப்பா நான் சாவேனா.....அப்பா நான் சாவேனா..."

9 comments:
:-((
NATHURAM GOTSEY KILLED GANDHI, RAJAPAKSEY KILLING TAMILS IN THOUSANDS, REASON IS ONE, ONE INDIA AND THE REAL POWER HOLDERS BEHIND THE GOVERNMENT. THEY NEVER SHOW THEIR FACE BUT THEIR UGLY UNFAIR ACTIVITIES WILL EXPLAIN THEIR DIRTY HEART. SIMPLY TELLING THEY ARE IN FEAR BECAUSE THEY ARE NOT THE PEOPLE OF THIS LAND. THEY ARE EXPLOITING THE THE ANCIENT PEOPLE OF THIS LAND.
இந்தசப்பவத்தை கற்பனையில் செய்துபார்ப்பதற்க்கே மனம் அஞ்சிக்கலங்குகின்றது..இதனை பக்கத்தில் இருந்து பார்தத்த உங்கள் எத்தகைய பாதிப்பினை அடைந்திருக்கும் எண்னிப்பர்க்கின்றேன்..வெளியுலகம் அறியமால் அரங்கேறிய கொடுரங்களை வெளியுலகம் அறியும்வண்ணம் பதிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன்..உண்மைகள் என்றும் உறங்காது..
நீங்கள் நேரிலே நின்று நரக வலிகளை அனுபவித்து வந்தவரா?
நேரில் பார்க்க விரும்புகிறேன்.முடியுமா?உள்ளம் விறைக்கும் வரிகள்.பிடிச்சிருக்கு.
தொடர்ந்து இப்படி உண்மைகளை பகிர எங்களது எதிர்பார்ப்புகள்.
செம்பகம்
நணபனே மிக மிக நன்றாகவுள்ளது. எவ்வாறு பாராட்டுவதென்பதற்கு வார்த்தைக்கணைகள் என்னிடம் இல்லை அவ்வளவிற்கு மிக சிறப்பாக உள்ளது.மென்மேலும் சிறக்க எனது வாழ்துக்கள்.
ராதா கிருஸ்ணன் அவர்களே உங்கள் உணர்வை வெளிப்படுத்தியதற்கு, எனது ந்ன்றிகள்.
அன்ரன் ஜெனிபேட் அவர்களே உங்கள் உணர்வை வெளிப்படுத்தியதற்கு, எனது ந்ன்றிகள்.
விடிவெள்ளி அவர்களே உங்கள் உணர்வை வெளிப்படுத்தியதற்கு, எனது ந்ன்றிகள்.
.Dear vovank, I realy thanks for your comment.
Post a Comment