Friday, February 12, 2010

அன்பே நிரந்தரம்



உறவே நீ தொடராயோ

பிரிவே நீ விலகாயோ

மனித வாழ்வதே நீர்க்குமிழி போன்றதே

எங்கோ எதிலோ வாழ்வது முடிந்து போகுமே


தனக்கென வாழாமல் பிறக்கென வாழ்வோரை

எந்நாளும் நெஞ்சத்தில் இருத்திவைப்போம்

பல்லாண்டு போனாலும் சரீரம் வெந்தாலும்

அழியாமல் உள்ளத்தில் வாழவைப்போம்


பொதுவாழ்வு என்பது ந்ம் உள்ளத்தில் மலர்வது

துளியாகி விழுந்தாலும் மழையே மண்ணில்

உயிர்தனைக்காக்கவில்லையா??..........

உள்ளத்தில் ஒன்றாகி உருவத்தில் வேறாகி

பொய்யான மாயைக்குள் வீழ்ந்திருப்பார்

நில்லாத பொருளாலே பொல்லாத பகைதேடி

தீராத துன்பத்தில் தோய்ந்திருப்பார்


அன்பொன்றே வாழ்வில் நிரந்தரமானதே

கரைதேடி தவழ்ந்தாலும் அலைகள் என்றும்

கடல்தனைப்பிரிவதில்லையே


எண்ணங்கள் ஒரு கோடி இதயத்தில் உருவாகி

இறக்கைகள் முழைத்தெங்கோ பறந்திருக்கும்

பெற்றோரைப் பெரியோரை

பணிந்திங்கு வாழ்வோர்க்கு

பொன்னான எதிர்காலம் கூடிவரும்


எண்ணங்கள் வாழ்விலே ஈடேறும் நாள்வரும்

புயலாகி வரும்போது அதுவே விரைவாய்

தென்றலாய் மாறவில்லையா??


3 comments:

மதுரை சரவணன் said...

arumaiyaana varikal. /anbonre valvil nirantharam/
/panithingku vaalvorukku
ponnaana ethirkaalam kutivarum/

nalla varikal . unmaiyai unarththu kirathu. vaalththukkal.

Keddavan said...

//எண்ணங்கள் ஒரு கோடி இதயத்தில் உருவாகி
இறக்கைகள் முழைத்தெங்கோ பறந்திருக்கும்
பெற்றோரைப் பெரியோரை
பணிந்திங்கு வாழ்வோர்க்கு
பொன்னான எதிர்காலம் கூடிவரும்//
கண்ணதாசனின் பாடல்களைப்போல சந்தத்தோடு கருத்தாழமிக்கதாக இருக்கின்றது உங்கள் கவிதைகள்..

வான்முகில் said...

மதுரை சரவணன் அவர்களே
தங்கள் கருத்துக்கு நன்றிகள்.
தொடர்ந்தும் என்னை ஊக்குவியுங்கள்

Post a Comment

yasmin lawsuit