Monday, February 8, 2010

என்னவளே..............



நீலக்கடலின் ஓரத்திலே நீளும் மணல் வெளிகளிலே
என் மனம் உன்னைத்தேடுதே மணல் வீட்டின் கதையாகி.....
நம் வாழ்வு நீரில் கரைந்ததென்ன?
என் உள்ளக்கோவிலில் நீயே வாழ்ந்தாய்
என் உள்ளச்சுமைகளை நீயே ஏற்றாய்
உன் நெஞ்சத்துள் எனை வைத்தாய்

எனக்காய் ஓயாது உழைத்தவள்
தன் உறவையும் எனக்காய் துறந்தவள்
கொதிமணலோரம் வாழ்ந்தும் குறையேதும் அறியேன் என்றவள்
கல்லிலும் முள்ளிலும் நித்தமும் நடந்தும் புன்னகைப் பூவைச் சொரிந்தவள் ஆயிரம் எண்ணம் அலைகள் பாய்ந்து வாலிப நெஞ்சம் கைகள் கோர்த்த இளமையின் வாழ்வே திரும்பாயோ

வசந்தத்தின் வாசல் திறவாயோ எப்போதும் ஒன்றான வாழ்வின் பயணம் இப்போது ஏனோ இரண்டாகிப்போச்சு நம் வாழ்வுப் பயணங்கள் ஒன்றென்றோம் எனக்காக நீயும் உனக்காக நானும் எப்போதும் ஒன்றாய் வாழலாம் என்றாய் முதுமை வாழ்விலும் பிரியாமை கேட்டாய் வாழ்ந்த நாளெல்லாம் என்வழி வந்தவள் மரணத்தின் வழியில் தனிவழி போனாள் நீ

புன்னகைப் பூவாய் மலர்ந்தவள்-அதனால்பூவின் கதையாகிப்போனவள்
காயமே அது பொய்யாம் -வெறும்காற்றடித்த பைய்யாம் மனிதக்கிழவனின் மாயக்கதைகளைஎன்மனம் ஒன்றும் ஏற்பதாய் இல்லைஎன் இணக்குருவி கூடு திரும்புவாள் தன் அன்புக்குஞ்சை தாவிஅணைப்பாள்
நித்தமும் உன்னுடன் நினைவில் வாழ்கிறேன் பித்தனாய் என்று புரண்டு அழுகிறேன் நெஞ்சோடு உறவாடி நிழலாடுகின்றாய் உன் வழி பார்த்து காத்து நிற்கின்றேன் நீலக்கடல் ஓரத்திலே நீளும் தரைவெளிகளிலே என் மனம் உன்னைத்தேடுதே

4 comments:

Keddavan said...

//எப்போதும் ஒன்றான வாழ்வின் பயணம்இப்போது ஏனோ இரண்டாகிப்போச்சு//
பிரிவு என்பது கொடுமையான விடயம் தான்...ஆனால் இப்பொழுது அது ஈழத்தமிழினத்தின் அடையாளமாகவே மாறிவிட்டது.பிரிவுமட்டும் எமைப்பிரியமறுக்கின்றது..

Keddavan said...

கவிதையில் காதலையும் சோகத்தினையும் கசக்கிபிழிந்திருக்கின்றீர்கள்...

வான்முகில் said...

((//எப்போதும் ஒன்றான வாழ்வின் பயணம்இப்போது ஏனோ இரண்டாகிப்போச்சு//
பிரிவு என்பது கொடுமையான விடயம் தான்...ஆனால் இப்பொழுது அது ஈழத்தமிழினத்தின் அடையாளமாகவே மாறிவிட்டது.பிரிவுமட்டும் எமைப்பிரியமறுக்கின்றது..))

பிரிவின் கொடுமை பிரித்தவன் அரியான்...
என்றோ ஓர் நாள் அவனும் அறிவான்
அப்போதுணர்வான்.......
அவனும் அழுவான்......
விரைவில் அழிவான்...

Anonymous said...

HAI ! I AM BHABU FROM FRANCE...... ENAKKU ENTHA" ENNAVALE" KAVITHAIE ROMPA PIDICHCHIRUKKUTHU.....IT 'S REALLY GREAT. I WOULD LIKE TO WISH PUGAIYURAAN SIR..... BEST OF LUCK....

Post a Comment

yasmin lawsuit