Monday, February 8, 2010

தேசமே..........



















நான் பிறந்த தாய் நிலமே
நான் தவழ்ந்த தமிழ்நிலமே
உனை இழந்து நாளாச்சு
என் மனமுடைந்து போயாச்சு
நான் நனைந்த மழைத்துளியே
என் முற்றத்து நிலா ஒளியே
பனை மரமே பட்சிகளே,புல்வெளியே,பூவரசே
எத்தனையோ ஞாபகங்கள் நெஞ்சினில் நிழலாடும்
அத்தனை நினைவுகளும் எனை விட்டு பிரிவதில்லை........

காலம் கரந்தாலும் என் கண்ணை விட்டுப் போவதில்லை
என்னவென்று நான் சொல்ல என் மண்ணின் பேரழகை
இது கடல் வந்து தாலாட்டும் அழகான சிறுதீவு-இங்கு
பல நூறு கயல் வந்து கழி கொண்டு விளையாடும்
தூரக்கடலின் சுந்தரத்தென்றலெல்லாம்
என் மண்ணைக் கடந்தே எங்கும் போய்ச்சேரும்......
மாலைப் பொழுதினிலே மாமரச்சோலையினிலே
கிட்டிப் புள்ளடித்து கீதங்கள் பாடிடுவோம்
பள்ளிப்பாடங்கள் பக்குவமாய் கற்றிடுவோம்
பண்பாட்டு அற நெறிகள் ஏராளம் கற்றிடுவோம்
எங்கள் ஆசானைப்போல் எங்கேயும் எவருமில்லை
நண்பனாய்,தோழனாய்,தாயாய் குருவாய்
எப்படி உங்களால் அப்படி முடிந்தது??
உங்கள் முகம் காண இன்னும் ஏங்குகின்றேன்......

என் பள்ளி உறவுகளே என் உயிர் நண்பர்களே
உங்கள் முகங்களை இன்னும் தேடுகிறேன்
சிறிய முகங்களில் சிந்திய புன்னகைக்காய்
பிஞ்சுக்கைகளால் பகிர்ந்துண்ட உணவுக்காய்
ஆல மரத்தடியில் அணில் பிடித்ததுவும்
கடலைக்காரியிடம் கச்சான் வாங்கியதும்
காசு கேட்டதும் தப்பி ஓடியதும்
ரூபா ஒன்றிற்கே தவண்டையடித்ததும்
எப்படி மறப்பது எவர்க்கெடுத்துரைப்பது??........

பாவம் கிழவி பரலோகம் போயிருப்பாள்
அப்பவே அவளுக்கு எழுபது வயதிருக்கும்
இப்போது அவளிருந்தால் நூறு வயதிருக்கும்
யப்பான் கிழவியென்றால் இன்னும் இருந்திருப்பாள்
இப்போதும் நான் அவளைத்தேடுகின்றேன்
வட்டியும் முதலுமாய் கடனைக்கொடுப்பதற்கு.......

என் ஊரின் கடலோரம் இரண்டு கோயில்கள்
கிழக்கே போனால் கண்ணகி அம்மன்
மேற்கே போனால் இறைவனின் ஆலயம்
வெள்ளியில் இங்கே செவ்வாயில் அங்கே
கடவுளை மட்டுமா கும்பிடப்போனோம்-இல்லை
கன்னியர் அழகிலும் மயங்கிடப்போனோம்.......
பசுமையின் நினைவுகளே பழகிய தோழர்களே
உங்கள் நினைவுமட்டும் என்னிடம் இல்லையென்றால்
எப்போதோ இறந்திருப்பேன் எருவாகிப்போயிருப்பேன்
பனி கொட்டும் வெளி நாட்டில் வசதிகள் எனக்குண்டு
பாரெங்கும் அலைந்ததினால் அகதியின் பட்டமும் உண்டு......

என் இறுதிப்பயணங்கள் என் மண்ணில் எனக்கு வேண்டும்
எவருக்கும் அடிபணியா ஒரு வாழ்வு கூடவேண்டும்
நான் பிறந்த என் மண்ணில் நான் மரிக்க வரம் வேண்டும்........

7 comments:

Keddavan said...

அற்புதமாகமாக இருக்கின்றது உங்கள் கவிதை..இந்தத்தீவினில் நாங்கள் வளரமுடியவில்லையே என்ற ஏக்கத்தை உருவாக்கிவிட்டீர்கள்..தொடரட்டும் உங்கள் பணி...

Keddavan said...

//-இல்லைகன்னியர் அழகிலும் மயங்கிடப்போனோம்//உண்மையை ஒத்துக்கொண்டிருக்கீர்கள்..உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு...:D

//பனி கொட்டும் வெளி நாட்டில் வசதிகள் எனக்குண்டு// காசுகிடைக்குது என்றா பனிகொட்டினா என்ன பாறங்கல்லுகொட்டினா என்ன?

வான்முகில் said...

எனது பதிவின் முதலாவது கருத்து உங்களிடமிருந்து வந்தது கண்டு
ஆனந்தம் அடைகிறேன்
தொடர்ந்தும் உங்களது கருத்துகள் தான் என்னை ஊக்குவிக்கும்.
உங்கள் ஆசைகள் நிறைவேறும்......
கருத்துக்கு நன்றி......

U.P.Tharsan said...

//நான் பிறந்த தாய் நிலமே
நான் தவழ்ந்த தமிழ்நிலமே
உனை இழந்து நாளாச்சு - என்
மனமுடைந்து போயாச்சு//

பலவிதமான ஏக்கங்களை பதிவு சொய்த பதிவு... மிக்க நன்று.... கவிதையை பிரசுரிக்கும் போது.. ஏதோ கட்டுரை வெளியிடுவது போல் அல்லாமல்.. நேர்த்தியாக அடுக்குங்கள்.

Unknown said...

HAI UNCLE !

CONGRAGULATIONS FOR YOUR EVERY POETRIES UNCLE. IT IS GREAT AND INTERESTING.YOUR EVERY POEMS ARE CLOSETO THE NATURAL.I HAVEN'T WORDS TO WISH YOU.YOUR POETRY EVERY WORDS ARE GOLD AND PEARL.I AM VERY PROUD OF YOU UNCLE. I WILL WISH YOU , YOU MUST WRITE MORE POETRY BY OUR EVERYONE LIKES. WISH YOUR ALL THE BEST UNCLE.I WILL PRAY TO MY GOD , YOU MUST BUILD YOUR MIND MORELY.


WISHES BY THVYA.

வான்முகில் said...

தர்ஸன் அவர்களே கருத்துக்கு நன்றி தாங்கள் கூறியதை கருத்தில் எடுத்துள்ளேன்.

வான்முகில் said...

hii thivya
thank your for your comments
its realy cheer full to me
i am expecting for more comments....

Post a Comment

yasmin lawsuit