Monday, March 29, 2010
அடிமைத்தனத்திலிருந்து மீண்ட இஸ்ரவேல் மக்களும் ,அடிமைகளாகும் ஈழத்தமிழர்களும்--ஓர் ஆய்வு
ஒவ்வொரு காலகட்டத்திலும் கடவுள் உலக வாழ்வில் போராடும் மக்களை வழிநடத்துவதற்காக ஒருவரை தெரிந்தெடுப்பதை வரலாற்றில் கேள்விப்பட்டிருக்கிறோம். அல்லவா? அதே போலத்தான் இஸ்ரவேல் மக்களை வழிநடத்துவதற்காக தேர்ந்தெடுத்தவர்களில் "மோசே" என்பவரும் அவரின் பின்வந்த "ஜோசுவா" என்பவரின் வரலாற்றையும் தாயகத்திலும் உலகெங்கிலுமுள்ள தமிழர்களும் இன்று அறிந்திருப்பது மிகவும் அவசியம். இக்கட்டுரையில் ஜோசுவாவின் சம்பவம் ஒன்றையே நான் ஒப்பிட விளைகிறேன்.இந்தக்காலம் போலல்லாமல் ஆதிகாலத்தில் மனிதர்களுடன் கடவுள் பேசியதையும், நேரடியாக கதைத்து உறவாடியதையும் பல மார்க்கங்களில் நாம் வாசித்து அறிகின்றோம். அந்த வகையில் முகமுகமாக பார்த்து பேசிய பெருமையும் வழிநடத்திய பெருமையும் கிறீஸ்தவத்தில் மோசேக்கே சேரும்.மோசே தனது நூற்றியிருபதாவது வயதில் "மோவாப்" தேசத்தில் மரித்ததைத்தொடர்ந்து அடிமைப்பட்ட இஸ்ரவேல் மக்களை வழிநடத்தும் பொறுப்பை கடவுள் யோசுவா என்பவருக்கு வழங்கினார். யோசுவாவின் காலத்தில் நடந்த அழகான சம்பவம் ஒன்று தமிழ்மக்களுக்கு முக்கியமான ஓர் பாடமாக இருக்கும் என எண்ணுகிறேன்.உண்மையில் வரலாறு மனித குலத்துக்கு வழிகாட்டிச் செல்வதையும் அது மீண்டும் மீண்டும் பிறப்பதையும் யாரும் மறந்து விடக் கூடாது. மோசேயின் காலத்தைப் போன்றே "யேசுவா"வும் தன் மக்களை வழிநடத்திச்செல்கையில் பல போர்களை ச்சந்தித்தார்.தமக்கு எதிராக வந்த அத்தனை பேர்களையும், கடவுளின் வழிநடத்தலுடன் அழித்தொழித்து பிரதேசங்களை படிப்படியாக மீட்டார் .ஈழத்தமிழர்கள் பெற்றிருந்த வெற்றியைப் போன்று.ஆனால் இஸ்ரவேலர் கானானியரையும் ,ஏத்தியரையும்,ஏவியரையும் ,பெரிசியரையும், கிர்காசியரையும், ஏமோரியரையும்,எபூசியரையும் . துரத்தியும் முறிய அடித்தும் பயணித்துப் போராடி வென்றார்கள். இந்த நீண்ட பயணத்தின் போது யேசுவாவும்,இஸ்ரவேல் மக்களும் "எரிகோ" எனும் பட்டணத்தைக் கைப்பற்றுவதற்காக சீத்தீமிலிருந்து பிரயாணம்பண்ணி யோர்தான் கடந்து செல்லவேண்டியிருந்தது.இந்த நதியைக் கடக்கும்போது கூட மோசே செங்கடலைப்பிரித்து மக்களை அழைத்துச்சென்றதைப் போன்று கடவுள் நதியை ஓடாமல் நிறுத்தி வைத்து அதை வற்றவைத்த பின்பு இவர்கள் கடந்ததாகவும் இதன் அடையாளமாக பன்னிரண்டு கற்கள் "கிக்கால்"எனும் இடத்தில் நாட்டப்பட்டுள்ளதையும் இன்றும் காணலாம். தமக்கு எதிரான எரிகோவை கைப்பற்றுவதற்காக ஏறக்குறைய நாற்பதினாயிரம் பேர் யுத்த சன்னத்தராய் போனார்கள்.
இங்குதான் முக்கியமான ஒன்றை நோக்கவேண்டியுள்ளது.அதாவது இந்தப் பட்டணத்தைக் அழிக்கும் போது இதிலுள்ள எப்பொருளையும் ,களவாடவோ சூறையாடவோ கூடாதென கடவுள் யோசுவா ஊடாக கட்டளை கொடுத்திருந்தார்.கடவுளின் கட்டளைப்படி யோசுவா வழிநடத்திய மக்கள் இந்தப் பட்டணத்தைக் கைப்பற்றி முழுமையாக தீக்கிரையாக்கினார்கள்.இங்கே இஸ்ரவேல் வேவுக்காரர் இருவருக்கு உதவி செய்த "ராகாப்" எனும் வேசி ஒருத்தியின் குடும்பம் தவிர எல்லாமே தீக்கிரையாக்கப்பட்டது. ஆனாலும் ஒரு தவறு நடந்தது.ஆம் போரில் ஈடுபட்ட வீரர்களில் "ஆகான்"என்பவன் தன் தலைவன் கட்டளையை மீறி கொள்ளைப் பொருட்களில் ஆசைப்பட்டு சிலவற்றை தனது சுயநலத்திற்காக எடுத்திருந்தான். இப்போரின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து யோசுவா எரிகோவிலிருந்து பெத்தேனுக்கு கிழக்கேயுள்ள பெத்தாவேன் சமீபத்திலிருக்கிற "ஆயி" பட்டணத்தைக் கைப்பற்ற எண்ணி அதை வேவு பார்பதற்காக ஆட்களை அனுப்பினார்.வேவுக்காரர் திரும்பி வந்து நமது ஜனங்கள் எல்லோரும் போக வேண்டியதில்லை.ஏறக்குறைய இரண்டாயிரம் ,மூவாயிரம்பேர் போய் அயியை முறிய அடித்துவிடலாம்.அவர்கள் கொஞ்சப் பேர்தான் என்றனர்.அப்படியே ஏறக்குறைய மூவாயிரம் பேர் அங்கே போருக்கு போனார்கள்.ஆனாலும் அவர்கள் "ஆயியின்"மனுசருக்கு முன்பாக முறிந்தோடினார்கள்.செரீம் மட்டும் துரத்தி வந்த அவர்கள் மலையிறக்கத்திலே இஸ்ராயேலரை வெட்டினார்கள்.இதனால் இஸ்ராயேல் ஜனங்களின் மனங்கள் கரைந்து தண்ணீராய்ப் போயிற்று.கடவுளை நம்பியிருந்த"யோசுவா"மனம் உடைந்தவராக தன் வஸ்திரங்களை கிளித்துக்கொண்டு கடவுளின் உடன்படிக்கைபெட்டிக்கு முன்பாக முகம் குப்புற வீழ்ந்து கிடந்து புழுதியைத்தலையில் கொட்டி அழுதார்.அப்போது கடவுள் யோசுவாவை நோக்கி எழுந்திரு நீ இப்படி முகம் குப்புற வீழ்ந்து கிடப்பது என்ன? இஸ்ரவேலர்கள் பாவம் செய்தார்கள் நான் கட்டளை இட்டதை மீறி பொருட்களுக்கு ஆசைப் பட்டு கொள்ளையிட்டார்கள் அதனால் தங்கள் எதிரிக்கு முன்பு நிற்கக்கூடாமல் புறமுதுகு காடினார்கள் என்றார். எனவே சாபத்தீட்டானவர்களை உங்கள் நடுவிலிருந்து எரிக்காவிட்டால் இனி நான் உங்களோடு இரேன் என்றார் கடவுள்.(யோசுவா. 7:11 :12)
அத்துடன் இச்செயலைச் செய்தவர்களும், அவனுக்குள்ள யாவும், அக்கினியில் சுட்டெரிக்கக் கடவது என்றார். இதன்படியே யோசுவா மறுநாள் எல்லா வம்சங்களையும், தனக்கு முன்பாக வரப்பண்ணி, விசாரணை குறிக்கப்பட்டு, "ஆகான்" செய்த மதிகேடான காரியமே இந்தத் தோல்விக்குக் காரணம் என்பதனைக் கண்டறிந்தான்.அவன் பூமிக்குள் புதைத்து வைத்திருந்த,அந்தக் களவாடிய பொருட்களையும், ஆகானையும்,அவன் குமாரரையும், குமாரத்திகளையும்,அவனது கால் நடைகள் உள்ளிட்ட அவனுக்குண்டான யாவற்றையும், யோசுவாயும் இஸ்ராயேலரும் கூட ஆகோர் பள்ளத்தாக்குக்குக் கொண்டுபோய், அவன்மேல் கல்லெறிந்து,அவைகளை அக்கினியில் சுட்டெரித்து,கற்குவியலைக் குவித்தனர்.ஆகையால் அந்த இடம் இந்நாள்வரைக்கும் ஆகோர் பள்ளத்தாக்கு எனப்படுகிறது.(யோசு. 7:24-26). தம்மத்தியில் தமக்கு எதிராக துரோகத்தனம் புரிந்த, தம் தலைவனின் கட்டளைக்கு எதிராகச் செயற்பட்ட அல்லது தனது சுயநலத்துக்காக செயற்பட்ட "ஆகானை" இஸ்ராயேல் மக்கள் அன்று இனம் கண்டு தம்மத்தியிலிருந்து வேருடன் பிடுங்கி சுட்டெரித்ததன் பின்னர் தாம் தோற்றுப்போய் பின்வாங்கி ஓடிய ஆயின் பட்டணத்தின்மேல் மீண்டும் படையெடுத்து, முளுமையான ஓர் வெற்றியைப் பெற்றனர். இப்படியாக தமக்கு கடவுள் வாக்களித்த தேசத்தை மீட்டனர் என்பதே வரலார்று.
அக்காலத்தில் தெய்வங்கள் நேரில் நின்று தாமே போராடி தீயவர்களை அழித்துள்ளதை பல மார்க்கங்களிலும் காணலாம். எடுத்துக்காட்டாக முருகப் பெருமான் சூரனுடன் போர் செய்து அவனை வீழ்த்தியதையும் நாமறிவோம்.இன்று அப்படியில்லையே என சிலர் சிந்திக்கலாம், ஆனால் அதுவல்ல முக்கியம்.அதற்காக வாதாடுவதும் எனது நோக்கமல்ல,நேரயாடிக போர் செய்யாவிடினும், அதற்குச் சமமான மாபெரும் ஆற்றலை,பகுத்தறிவை விழிப்புணர்வை, எல்லாவற்றிற்கும் மேலாக அற்புதமாக வழிகாட்டி நிற்கும் வரலாற்றையும் கடவுள் மனித குலத்துக்குக் கொடுத்துள்ளார். இது ஒன்றே வெல்வதற்குப் போதுமனதாகும்.
பல தசாப்தங்களாக அடிமைப் பட்டிருந்த தமிழினத்தின்,அடிமை விலங்கினை உடைப்பதற்காக தமிழ் இனத்தின் மத்தியில் கடந்த முப்பது ஆண்டுகளுக்குமுன் தலைவனாகத் தோன்றிய ஒருவர் தன் மக்களை வழிநடத்தி இஸ்ராயேல் மக்கள் பெற்ற அதே போன்ற தொடர் வெற்றிகளை ஈட்டி, வளம் நிறைந்த, பாலும் தேனும் வழிந்தோடும் தாயகப் பிரதேசத்தை மீட்டு தமிழினம் அன்னியத் தலையீடின்றி சுதந்திரமாக வாழ்ந்து வந்தது.அங்கு சாதீயமோ, மதப்பிளவுபாடோ, அச்சமோ இருந்திருக்கவில்லை. ஆனால் இஸ்ராயேலருக்கு "ஆகான்"என்பவனைப் போல் தமிழ் இனத்துக்கும் பற்பல துரோகிகள் தம் இனத்துக்குள்ளிருந்தே உருவானார்கள், இதனால் இஸ்ராயேலருக்கு "ஆயிலில்"நடந்ததைப்போன்று இங்கும் தோல்வியைச் சந்தித்தனர். ஆனால் அந்த மக்களோ, தம் துரோகிகளையும் சுயநலக் காரர்களையும்,கல்லால் எறிந்து சுட்டெரித்தார்கள்.அடியோடு ஓழித்தார்க்ள் இதனால் தமக்கான நாட்டை அவர்கள் மீட்ட வரலாற்றுப் பாடத்தில் நின்று கொண்டு,தமிழர்கள் நன்றாகச் சிந்தித்தால்,அவர்களின் தோல்விக்குக் காரணம் பல இருப்பினும், முக்கியமானது, எதிரிக்குத் துணை போனதும்,ஓரணியில் ஒன்று படாமையும்,சுயனலத்துக்காக சிலர் செயற் பட்டதையும் குறிப்பிடலாம். எனவே இந்த மூன்று விடயத்தையும் ஒழித்து விட்டால் தமிழ் இனம் தம் தாயகத்தை நிச்சயம் அமைக்கலாம்.மேற்குறிப்பிட்டவர்களை வேருடன் பிடுங்கி தீயில் போடுவதற்கும் கல் எறிவதற்குமான மிக அருமையான, அற்புதமான ஓர் சந்தர்ப்பத்தை இப்பொழுது வரலாறு தமிழர்களுக்கு வழங்கிப் பார்த்து நிற்கிறது.அதுதான் நடக்கப்ப்போகும் "தேர்தல்." நான் மேலே குறிப்பிட்டதைப் போல் உங்களிடமுள்ள அற்புதமான பகுத்தறிவைப்பாவித்து,விடுதலைக்காக வித்தானவர்களையும் அதன்பால் உயிர் நீத்தவர்களையும் நினைந்து தூரனோக்குடன் சிந்தித்து வாக்களிப்பதன் மூலம் உங்கள் வாசல் தேடி வந்து நிற்கும் மேற்சொன்ன மூன்று வகையனவர்களையும் ஒழித்துவடுங்கள். நான் அரசியல் சாக்கடையில் விழாதவன்,ஆனால் அரசியலையும் வரலாற்றையும் படித்திருக்கிறேன்.போரில் வென்றலும்கூட இன்றைய உலக ஒழுங்கில் தேர்தல் மூலமான மக்களின் வாக்களிப்பே இறுதி முடிவாகவுள்ளதை நீங்களும் அறிவீர்கள்.முகத்துக்கோ, உறவுக்கோ, முன்னுரிமை கொடுப்பதைத் த்விர்த்து, எதிர்காலத்தை மட்டும் கருதி செயற்படுங்கள்,ஒற்றுமையை நிலை நாட்டுங்கள் கடவுளின் வரலாற்றினூடாகப் பேசினேன் இது தவறினால் தாயகம் முழுவதும் சிங்களவர் மயமாகும்.இப்போதே அடிமரத்தில் கோடாரி வைக்கப்பட்டுள்ளது, காலம் காத்திருப்பதில்லை , அது கடந்துவிட்டால் கடுகளவும் பயனில்லை.
......
Saturday, March 13, 2010
உயிர் காத்த உயிர் மரங்கள்

Friday, February 19, 2010
ஒன்று பட்டால்
வந்தோரை வரவேற்கும் பண்பாளன் தமிழன்Thursday, February 18, 2010
நரகத்தின் கதை (உண்மைக்கதை)

Wednesday, February 17, 2010
நெறி கெட்ட வெற்றி

Sunday, February 14, 2010
அப்பா நான் சாவேனா....

என் நாட்குறிப்பின் ஒருபக்கத்தை மட்டும் இன்று திறக்கின்றேன்,உங்களுக்காக இது கற்பனை அல்ல என் உயிரில் கலந்த உண்மைகள்.இவை தொடரும்....
அது கடலலை தாலட்டும் மாத்தளன் கடலோரம், லட்சக்கணக்கான மக்களுடன் அன்ரன் அண்ணனின் குடும்பமும் சிறிய படங்குக்குள் முடங்கிக்கிடந்தது.மூத்த பெண்பிள்ளைகள் தவிர ஆசையான கடைசி ஒரே மகன் வயது பத்திருக்கும்.குடும்பமே அவன் மேல் உயிரையே வைத்திருந்தது.சாதாரண நாட்க்களில் கூட பள்ளிக்கூடம் விட்டதும் மகனை சயிக்கிளில் ஏற்றியே திரிவார், அவ்வளவு கவனம்.
இப் பெண்பிள்ளைகளை எல்லாம் கரைசேற்க்கும் தோணியும் இவனே.
அவன் சிறுவன்தான், அவன் மனமோ அகன்றவானம், தன் தந்தை குடும்பத்தைக் காப்பாற்றப்படும்பாட்டை உணர்ந்து தனக்குள்ளேயே ஒரு கற்பனையை வளர்த்ததுடன் சகோதரிகளைசுற்றி இருத்தி, எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வான்.
வெறும் மணல் தரை, எல்லோரைப் போலவே இவர்களும் பூனை மண்ணைக்கிளறுவதைப்போல் மண்ணைக் கிளறி, அதன் மேல் படங்கைக் கட்டி, அதனுள் படுத்துக் கிடந்து உயிர்காக்கத் துடித்தனர்.ஆனால் அதனுள் குண்டு வீழ்ந்து துடிதுடித்து மடிந்தவர் கதைகளே அதிகம்.இப்படித்தான் இவர்களின் குடும்பமும் நாட்களைக் களித்தது.என்னதான் நடந்தாலும் குடிநீருக்கும் குளிப்பதற்கும் மலசலத்துக்கும் இதர அவசிய தேவைகட்கும், வெளியில் வந்துவிட்டு ஒடவேண்டும். இச்சந்தர்ப்பத்தில்தான் ஆயிரம் எண்ண்ம் சுமந்த அந்தச்சிறுபிஞ்சு, வெளிவந்து மீண்டும் வளைக்குள் போகுமுன்னர்,தூரத்து வேட்டொலிகள் அவனருகாக சீறிப்பாய்து போனது.
Saturday, February 13, 2010
புதிதாய் முளைக்கிறார் புத்தர்

Friday, February 12, 2010
அன்பே நிரந்தரம்

பிரிவே நீ விலகாயோ
மனித வாழ்வதே நீர்க்குமிழி போன்றதே
எங்கோ எதிலோ வாழ்வது முடிந்து போகுமே
தனக்கென வாழாமல் பிறக்கென வாழ்வோரை
எந்நாளும் நெஞ்சத்தில் இருத்திவைப்போம்
பல்லாண்டு போனாலும் சரீரம் வெந்தாலும்
அழியாமல் உள்ளத்தில் வாழவைப்போம்
பொதுவாழ்வு என்பது ந்ம் உள்ளத்தில் மலர்வது
துளியாகி விழுந்தாலும் மழையே மண்ணில்
உயிர்தனைக்காக்கவில்லையா??..........
உள்ளத்தில் ஒன்றாகி உருவத்தில் வேறாகி
பொய்யான மாயைக்குள் வீழ்ந்திருப்பார்
நில்லாத பொருளாலே பொல்லாத பகைதேடி
தீராத துன்பத்தில் தோய்ந்திருப்பார்
அன்பொன்றே வாழ்வில் நிரந்தரமானதே
கரைதேடி தவழ்ந்தாலும் அலைகள் என்றும்
கடல்தனைப்பிரிவதில்லையே
எண்ணங்கள் ஒரு கோடி இதயத்தில் உருவாகி
இறக்கைகள் முழைத்தெங்கோ பறந்திருக்கும்
பெற்றோரைப் பெரியோரை
பணிந்திங்கு வாழ்வோர்க்கு
பொன்னான எதிர்காலம் கூடிவரும்
எண்ணங்கள் வாழ்விலே ஈடேறும் நாள்வரும்
புயலாகி வரும்போது அதுவே விரைவாய்
தென்றலாய் மாறவில்லையா??
Thursday, February 11, 2010
மனிதன் கேட்கிறான்

சோலை மலர்களின் தேன் தேடும் வண்டினமே............
நீ ஓயாது உழைத்திடும் இரகசியம் சொல்லாயோ?
உழைத்திடா மனிதன் உன்னிடம் கேட்கிறான்
மெல்லெனப் பாய்ந்து வளைந்தோடும் நதிப்பெண்ணே..........
நீ நில்லாமல் வளைந்தோடும் இரகசியம் சொல்லாயோ?
சோம்பிக்கிடப்பவன் உன்னிடம் கேட்கிறான்
நீல வானில் அலைந்தோடும் முகிலினமே..........
நீ வழிதனில் தரித்திடா வழி சொல்ல மாட்டாயோ?
எப்போதும் உறங்கும் மானுடன் கேட்கிறான்
கரைதேடித் தவழ்ந்தும் கரைசேரா அலைகளே........
நீ சளைக்காமல் தொடரும் இரகசியம் சொல்லாயோ?
ஊக்கம் கெட்ட உள்ளத்தோன் கேட்கிறான்
தென்றலாய் புயலாய் வீசிடும் காற்றே.........
எந்நாளும் தணியாத உற்சாகம் தாராயோ?
இயலாமை பேசும் இளைஞன் கேட்கின்றான்
காலையில் பிறந்து மாலையில் மரிக்கும் வாசமலரே.........
உன் உள்ளத்தைத்திறந்து ஓர்தரம் காட்டாயோ?
சுயநலவாதி சோதிக்கக் கேட்கிறான்
ஓடையில் வாடி ஒற்றைக்கால் நிற்கும் வெண்கொக்கே.......
காத்திருக்கும் ஓர் சுகத்தை ஒருதரம் சொல்லாயோ?
என் அன்புக்காதலி உன்னிடம் கேட்கிறாள்
அழகான கூட்டின் தூக்கணாங்குருவியே.........
உன் அற்புத அலகின் ஆற்றல் சொல்லாயோ?
முயற்சிக்கா மனிதன் உன்னிடம் கேட்கிறான்
எப்போதும் ஒன்றாய் பயணிக்கும் எறும்பினமே.......
எல்லோரும் ஓரணியாய் வாழும் வழி சொல்லாயோ
ஒற்றுமை நீங்கித்தாழ்ந்தவன் கேட்கின்றான்
இயற்கையில் ஆற்றலைப்புகுத்திய இறைவனே........
முகத்தினைப்பார்த்து அகத்தினை அறியும் ஞானம் தாராயோ?
மனிதனால் நொந்த மனிதன் கேட்கிறான்
Monday, February 8, 2010
என் வன்னேரிக்காதலியே....

வன்னேரிக்குளம் தடவி வயல்வழிவந்தாயோ.....
என் ஆசைக்குமரியின் அழகைப்பார்த்தாயா........
என் அருமைக்காதலியே எழில்கொஞ்சும் நாயகியே....
எங்கே எங்கேயென என் வரவு பார்ப்பாயடி.
ஆயிரம் வலிசுமந்து உன் வழி வந்திருப்பேன்
உன் முகம் பார்த்ததும் எல்லாம் மறந்திருப்பேன்
பக்குவமாய் பருகிய பின் பாதியிலே பிரிந்திருப்பேன்
நீருக்குள் நிழலாடும் பச்சைவனக்கிளைகளே
கிளைகளில் கூடுகின்ற வெண்நாரை பட்சிகளே
ஆரவாரம் ஏதுமில்லா அமைதிப்பிள்ளையாரே
வழியோரம் வளைந்தோடும் வாய்காலே
பயிரகிக்கதிராகி காத்து நிற்கும் வயல்வெளியே
இத்தனை அழகையும் எங்கிருந்து பெற்றாயடி
வயதுக்கு வந்தவளே இயற்கையின் இளையவளே
உன்னைப்போல் உன்னைப்போல் எத்தனை அழகிகளை
கழைத்து உழைத்ததெல்லாம் கண்முன்னே போனதெடி
உற்றம் சுற்றம் உறவெல்லாம் தொலைந்ததடி
உலக மனங்களில் மனிதம் அது இல்லையடி
வயதாகிப்போனாலும் வாலிபம்தான் தேய்ந்தாலும்
தேயாத பிறையாகி தெருவோரம் காத்துநிற்பாய்
நீ கோடை காலத்தின் குளிர்விக்கும் அருவி
பங்குனி நாளொன்றில் உன் மடியில் படுத்திருந்தேன்
வலுவிழந்த மூதாட்டி வறுமையால் மீன்பிடித்தாள்
பொழுதாகிப்போனபின்னும் பறிதனில் மீனில்லை
ஆனாலும் மீனில்லை இரவுக்கோ உணவில்லை
சட்டென தூண்டலிலே சிக்கியது மீன் ஒன்று
மெல்லெனப் பிடித்ததனை புல்லினில் போட்டாள் பார்
வெற்றியால் புன்னகைத்தாள் பழங்கிழவி
ஒருவரின் துடி துடிப்பு மற்றவர்க்கு சிரிப்பென்றாய்
ஓர் நொடியில் ஓர்பாடம் உன்மடியில் நான் கற்றேன்
நிச்சயமாய் ஓர்நாள் உனத்தேடி நான் வருவேன்
எனக்காக காத்திரடி உறவாடப் பார்த்திரடி
வாழ்க்கைப் பயணம்

மனிதனாய் வாழ்ந்தால் அவை நியாயங்கள் நிறைந்தவை
நிறைவுடன் வாழ்ந்து நீத்தவர் உண்டோ?
கவலைகள் துறந்து கடந்தவர் உண்டோ
அலைகளில் தோன்றிடும் நுரைகளாய்
நுரைகளில் தோன்றிடும் குமிழ்களாய்
முடிந்தவர் வாழ்வினை அறிந்தவர் யாரோ
நடந்ததை எண்ணி நடைப்பிணமாவார்
மாற்றான் செல்வப் பெருக்கினைப் பார்த்தால்
நிலை தடுமாறுவார் நின்மதி கெடுவார்
ஊன மனத்துடன் உலாவியே திரிவார்
ஒருவரை ஒருவர் புரிந்திட மறுத்தார்
புரிதலே வாழ்வின் புதிரென அறிவாய்
காசு வாங்கியோ நமக்கு உதவும்
இறைவன் தந்த புன்னகைப்பூவை
அகத்தின் அழகை இயம்பும் மொழியை
பிஞ்சுக் குழந்தையாய் பிரந்தவரெல்லாம்
பெரிய மனிதராய் வளர்கிறார் காண்பீர்
பள்ளிப் பருவத்தில் பட்டாம் பூச்சியாகி
வாழ்க்கைப் பயணம் தொடர்ந்தே போனதால்
வாலிபம் தேய்ந்து வயோதிபம்வந்துவிடும்
பூமியை விட்டு புறப்படப் போவதை-நீ
நித்தமும் எண்ணி நிதம் நிதம் நோகிறாய்
வரவில் மகிழ்ந்து செலவில் துடிப்பதேன்
நதியோர மரத்தில் குருத்துக்கள் அரும்பும்
அரும்பும் குருத்துக்கள் இலைகளாய் மாறும்
பழுத்த இலைகள் நதிமேல் விழுமே
வீழ்ந்த இலைகள் மிதந்தே போகும்
இலையின் பாதை யார்தான் அறிவார்
நீயும் இலைதான் நீரின் கதைதான்
நீ இதை உணர்ந்தால் நிம்மதி பெறுவாய்
இரண்டு என்றாலும் ஒன்று

கரைகள் இரண்டானாலும் ஓடும் நதி ஒன்று
சிறகு இரண்டானாலும் பறப்பு என்பது ஒன்று
குயில்கள் வேறு ஆனாலும் கூவும் ஓசை ஒன்று
உண்மை பொய் இரண்டானாலும் பேசும் வார்த்தை ஒன்று
இன்பம் துன்பம் இரண்டானாலும் ஏற்கும் இதயம் ஒன்று
வளர்தல் தேய்தல் இரண்டானாலும் பிறை என்பது ஒன்று
ஆறு கேணி வேறானாலும் நீர் என்பது ஒன்று
கள்ளும் பாலும் வேறானாலும் வெண்மை என்பது ஒன்று
களவும் பொய்யும் வேறானாலும் சேரும் பாவம் ஒன்று
பூவும் காற்றும் வேறானாலும் மலர்தல் என்பது ஒன்று
தென்றல் புயல் வேறானாலும் காற்று என்பது ஒன்று
செடிகள் இரண்டு ஆனாலும் பூவின் மணம் ஒன்று
பக்கம் இரண்டு கொண்டாலும் இலை என்பது ஒன்று
விழுதுகள் பற்பல என்றாலும் ஆல் என்பது ஒன்று
எறும்பு யானை என்றாலும் உள்ளே உயிர் ஒன்று
ஏழை செல்வர் ஆனாலும் வாழ்வின் முடிவது ஒன்று
ஆண்டி அரசன் என்றாலும் சேரும் காடு ஒன்று
எல்லாம் இங்கே ஒன்றேயானால் உனக்குள் பிரிவு ஏனடா?
நீதி என்பது ஒன்றென்போம்நியாயம் என்பது ஒன்றென்போம்
சாதியென்பது ஒன்றென்போம்சமயம் என்பதும் ஒன்றென்போம்
வெற்றியை மனதினுள் வைத்திடுதோல்வியை படிகளாய் மாற்றிடு
அதர்மத்தை அடியோடு அழித்திடுதர்மத்தை காத்திட உழைத்திடு
அன்பெனும் தெய்வத்தை இருத்திடு
உன்மேல் நம்பிக்கை வைத்திரு
நல்லதை நாளும் நினைத்திடு
நினைத்ததை முடித்திடவிழித்திடு
இயற்கையை என்றும் மதித்திடு
தெய்வமே உனைத்தேடும் காத்திரு
கடவுளுக்கோர் கடிதம்

என்னவளே..............

காயமே அது பொய்யாம் -வெறும்காற்றடித்த பைய்யாம் மனிதக்கிழவனின் மாயக்கதைகளைஎன்மனம் ஒன்றும் ஏற்பதாய் இல்லைஎன் இணக்குருவி கூடு திரும்புவாள் தன் அன்புக்குஞ்சை தாவிஅணைப்பாள்
நித்தமும் உன்னுடன் நினைவில் வாழ்கிறேன் பித்தனாய் என்று புரண்டு அழுகிறேன் நெஞ்சோடு உறவாடி நிழலாடுகின்றாய் உன் வழி பார்த்து காத்து நிற்கின்றேன் நீலக்கடல் ஓரத்திலே நீளும் தரைவெளிகளிலே என் மனம் உன்னைத்தேடுதே
தேசமே..........

பள்ளிப்பாடங்கள் பக்குவமாய் கற்றிடுவோம்

